சித்தார்த் மல்ஹோத்ரா, கத்ரினா கைப் - இணைந்த இளம் ஜோடிகள்

திங்கள், 30 நவம்பர் 2015 (15:29 IST)
கத்ரினா கைப் தனது காதலர் ரன்பீர் கபூரை கழற்றிவிட்டு சித்தார்த் கபூரை சேர்த்துக் கொண்டாரா என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.


 

 
இது படத்துக்காக இணைந்த கூட்டணி.
 
முன்னணி நடிகையான கத்ரினா அறிமுக இயக்குனர் நித்யா மெஹ்ராவின் படத்தில் நடிக்கிறார்.
 
100 சதவீதம் காதலில் கடைந்தெடுத்த கதையான இதில், கத்ரினாவுடன் நடிப்பவர் சித்தார்த் மல்ஹோத்ரா.
 
காதலின் முக்கிய அம்சம் நினைவோடைதான். அதனால், தொண்ணூறுகளில் பிரபலமாக இருந்த பஞ்சாபி பாடல் ஒன்றை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
 
இதுபோல் சின்னச்சின்ன நகாசு வேலைகளால் இந்த காதல் கதையை மெருகேற்றியிருக்கிறாராம் நித்யா மெஹ்ரா.
 
படத்தின் முக்கியமான காட்சிகளை ஏற்கனவே யுகே படமாக்கியுள்ளனர். சித்தார்த், கத்ரினாவின் தேனிலவு காட்சிகளை தாய்லாந்தில் படமாக்க உள்ளனர்.
 
அட, கதையையும் லொகேஷனையும் சொல்லும் போதே காதல் உருகி வழியுதே...

வெப்துனியாவைப் படிக்கவும்