ரன்பீர் வீட்டை அழகுப்படுத்தும் ஷாருக்கின் மனைவி

வியாழன், 28 ஜூலை 2016 (16:50 IST)
ஷாருக்கானின் சொத்து மதிப்பு இரண்டாயிரம் கோடிகளை தாண்டும். அவரது இரு குழந்தைகள் லண்டனில் படிக்கிறார்கள். அதற்காக திருமதி ஷாருக்கான் - கௌரி கான் சும்மாயிருக்க முடியாதே. அவருக்குள்ளிருக்கும் க்ரியேட்டிவிட்டி என்னாவது?



கௌரி கான் சிறந்த இன்டீரியர் டிஸைனர். பல பிரபலங்களின் வீடுகள் இவரது கைவணத்தில் பொலிவு பெற்றிருக்கின்றன. சமீபமாக தனது க்ரியேட்டிவிட்டியை அடக்கி வைத்திருந்தவர், இப்போது அதனை திறந்து விட்டிருக்கிறார். ஆம், மீண்டும் இன்டீரியர் டிஸைனிங்கில் கௌரி கான் இறங்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக நடிகர் ரன்பீர் கபூரின் புதிய வீட்டை அழகுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார் கௌரி கான். ரன்பீரின் விருப்பம் அறிந்து கலையும், சரித்திரமும் கைகோர்க்கும் வகையில் இன்டீரியரை அமைத்து வருகிறாராம்.

கணவர் எத்தனை சம்பாதித்தாலும் தனது க்ரியேட்டிவிட்டியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறாரே... கௌரி கான் தி கிரேட்.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்