திருமணத்திற்கு பலே கண்டிஷன் போடும் ரன்வீர் - தீபிகா ஜோடி?

வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (17:05 IST)
பாலிவுட் பிரபலங்கள் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படிகோனே விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். தங்களது திருமண ஏற்பாடுகளை தற்போதே துவங்கியுள்ளனர். 
அந்த வகையில், தங்களது திருமணத்திற்கு வருபவர்களுக்கு சில கண்டிஷன்களை போட்டுள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு மிக நெருங்கிய உறவினர்களான 30 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். 
 
இவர்களின் திருமணத்திற்கு வரும் உறவினர்கள் யாரும் செல்போன் எடுத்து வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணத்தை சமூக வலைத்தளங்கள், செய்தி நிறுவனங்களுக்கு பிரபலப்படுத்த விரும்பவில்லை என்பதால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 
 
இவர்களின் திருமணம் இத்தாலியில் நவம்பர் 20 ஆம் தேதி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்