டிசம்பர் 5 வெளியான இப்படம் 45 முதல் 50 சதவீத பார்வையாளர்களையே பெற்றது. வெளிநாடுகளிலும் நிலைமை மோசம். ஐக்கிய அரபு நாடுகளில் இந்திப் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. முதல்வார இறுதியில் ஆக்ஷன் ஜாக்சன் போன்ற படம் ஆறு ஏழு கோடிகளை அனாயாசமாக வசூலிக்கும். ஆனால் இந்தப் படம் 3.02 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது.