நீண்டநாள் காதலருடன் திடீர் நிச்சயதார்த்தம் - ரசிகர்களை கலங்க வைத்த பூனம் பாண்டே!

திங்கள், 27 ஜூலை 2020 (09:49 IST)
சர்ச்சைக்குரிய பாலிவுட் நாயகி பூனம் பாண்டே அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே.

இதன் ஒரு படிமேலே சென்று, தனது ஆபாச வீடியோக்களுக்கென்றே தனி வெப்ஸைட் ஒன்றை இயக்கி வரும் இந்த கவர்ச்சி கன்னி அதில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு மேலும் முழு வீடியோவை பார்க்க என் வெப்சைட் பக்கத்துக்கு வாருங்கள் என அழைத்து அத்தனை ரசிகர்களையும் கிறங்கடித்து விடுவார்.

இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலரான  சாம் பாம்பே என்பருடன் பூனம் பாண்டேவிற்கு திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிச்சயம் ஆனதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருவரும் மோதிரத்தை அணிந்திருக்கும் புகைப்படத்தை காதலர் சாம் பாம்பே தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு பூனம் பாண்டேவின் தீவிர ரசிகர்களை கண்ணீரில் கலங்கடித்துவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்