பைரஸி பையனை பிடிச்சிட்டாங்க...

வியாழன், 23 ஜூன் 2016 (13:24 IST)
உத்தா பஞ்சாப் படம் திரையில் வெளியாகும் முன்பு இணையத்தில் வெளியிட்டது விஷமிகள் கும்பல். 


 
 
சென்சாருக்கு அனுப்பிய பிரதியிலிருந்து திருடப்பட்ட காப்பியை இணையத்தில் வெளியிட்டிருந்தனர். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் பாலாஜி மோஷன் பிக்சர்ஸ், ஃபேண்டம் பிலிம்ஸ் சைபர் க்ரைமில் புகார் செய்திருந்தனர். 
 
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை மும்பை போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர். அதற்கு முன்பாக 150 இணையதளங்களை தடை செய்துள்ளனர். இவை அனைத்தும் உத்தா பஞ்சாப் படத்தின் திருட்டு காப்பியை தரவிறக்கம் செய்ய வசதி செய்து தந்திருந்தன. 
 
டெல்லியில் கைது செய்யப்பட்ட நபர் யார் என்ற விவரத்தை இன்னும் மும்பை போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சர்ச்சைகளில் சிக்கிய இப்படம் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்