சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாரத் படத்தில் திஷா பதானி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்துக்கான ப்ரீமியர் ஷோ இரு நாட்களுக்கு முன் மும்பையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய காதலர் டைகர் ஷிராப்புடன் வந்திருந்த திஷா பதானி. வெள்ளை நிற கிராப் டாப்பும், ஆங்காங்கே கிழிந்து இருந்த நீல நிற ஜீன்ஸும் அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.