தங்கல்' பட நடிகை பாலியல் புகார் - குற்றப்பத்திரிக்கை தாக்கல்

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (18:03 IST)
நடிகர் அமீர் கான் தயாரிப்பில்  இந்தியில்  வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற படம் தங்கல். இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் சாயிரா வாசிம். இதில் அமீர்கானின் முதல் மகளாக சாயிரா வாசிம் நடித்திருந்தார்.


 
இந்நிலையில் 8 மாதங்களுக்கு முன்பு சாயிரா டெல்லியிலிருந்து மும்பைக்கு விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருடன் பயணம் செய்த ஒருவர் சாயிராவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.  இதுகுறித்து சாயிரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  சாயிரா 18 வயது பூர்த்தி ஆகாதவர் என்பதால் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இந்த புகார் தொடர்பாக காவல் துறையினர் இன்று குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்