நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடித்து வெளிவந்த ‘தங்கல்’ படம் கடந்த மாதம் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், தங்கல் படத்திற்கு சீனாவில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு சீனாவில் திரையிடப்பட்ட அனைத்து இந்திய படங்களின் சாதனைகளையும் முறியடித்துள்ள தங்கல் படம்.
இந்நிலையில், ‘தங்கல்’ படத்தின் இத்தகைய சாதனையை சீனாவின் மூத்த அரசியல் கட்சித் தலைவர் லியூ யுன்ஷன் பாராட்டி பேசுகையில், தங்கல் படத்தால் இந்தியா பெருமைப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ‘தங்கல்’ படத்திற்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.