2015-ல் தொடங்கும் டாவின்சி கோட் சீரிஸின் மூன்றாவது படம்

வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (10:01 IST)
டான் பிரவுன் எழுதிய டாவின்சி கோட் நாவலை அடிப்படையாக வைத்து அதே பெயரில் டாம் ஹங்ஸ் நடிப்பில் வெளியான படம் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பியது. அந்த வெற்றியால் டான் பிரவுனின் டாவின்சி கோட் நாவல் வரிசையில் இரண்டாவது புத்தகமான ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ் படத்தையும் திரைப்படமாக எடுத்தனர்.
 
இந்த இரண்டாவது பாகம் முதல் படம் அளவுக்கு போகவில்லை. ஆனாலும் படம் ஹிட்தான். இவ்விரு படங்களும் சேர்த்து உலகம் முழுவதும் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.
 
டான் பிரவுனின் நாவல் வரிசையில் நான்காவது புத்தகமான இன்ஃபெர்னோவை தற்போது படமாக்க திட்டமிட்டுள்ளனர். நாவல் வரிசையில் நான்காவது என்றாலும் பட வரிசையில் இது மூன்றாவதாக இருக்கும். டாம் ஹங்ஸே இதிலும் நடிக்கிறார்.
 
2015 ஏப்ரல் மாதம் இந்தப் படத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்