கபாலியை பின்னுக்கு தள்ளிய அமீர் கான் பட ட்ரெய்லர்

வெள்ளி, 28 அக்டோபர் 2016 (11:36 IST)
அமீர் கான் நடித்திருக்கும் டங்கல் படத்தின் ட்ரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளது.

 
கடந்த 20-ஆம் தேதி காலையில் டங்கல் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். அன்று ஒருநாளில் யூடியூபில் 90 லட்சம் பார்வைகளை இந்த ட்ரெய்லர் கடந்தது. அத்துடன் அமீர் கானின் பேஸ்புக் பக்கத்தில் 36 லட்சம் பேர் ட்ரெய்லரை பார்வையிட்டனர். 
 
இரண்டு தினங்களில் யூடியூபில் பார்வைகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 51 லட்சமாக உயர்ந்துள்ளது. அமீர் கானின் பேஸ்புக் பக்கத்தில் 43 லட்சங்கள். 
 
இது கபாலி டீசர், ட்ரெய்லர் சாதனையைவிட அதிகம் என்பது முக்கியமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்