மயக்க மருந்து கொடுத்து என்னை கற்பழித்தார் - பாலிவுட் நடிகர் மீது பெண் தயாரிப்பாளர் புகார்

புதன், 10 அக்டோபர் 2018 (11:41 IST)
பிரபல இந்தி நடிகர் அலோக் நாத், தன்னை கற்பழித்ததாக திரைப்படக் கதாசிரியையும், தயாரிப்பாளருமான விண்டா நந்தா குற்றம்சாட்டியுள்ளார்.
 
திரையுலகில் பெண்கள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகளை தற்பொழுது அவர்கள் தைரியமாக வெளியே சொல்லி வருகிறார்கள். இதில் பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர்.
 
அந்த வரிசையில் இந்தியில் பிரபல திரைப்படக் கதாசிரியையும், தயாரிப்பாளருமான விண்டா நந்தா பிரபல ஹிந்தி நடிகரான அலோக் நாத் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
 
தன் பேஸ்புக் பக்கத்தில் அவர், அலோக் நாத்தை நேரடியாக குறிப்பிடாமல் அவரது கதாப்பாத்திர பெயரை குறிப்பிட்டு, அந்த நடிகர் என்னை 19 வருடங்களுக்கு முன்பு, அவர் வீட்டில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்க அழைத்திருந்தார். நானும் அங்கே சென்றேன். அங்கு அவர் எனக்கு மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை கற்பழித்துவிட்டார்.
இதனை என் நண்பர்களிடம் கூறினேன். அவர்கள் அந்த சம்பவத்தை பற்றி வெளியே கூறாமல் மறந்துவிடும் படி அறிவுரை வழங்கினர்.
 
பாலியல் தொல்லைகளை கொடுத்து வரும் அலோக் நாத்தைப் போன்ற விலங்குகளைப் பற்றி தைரியமாக பெண்கள் வெளியே சொல்லுங்கள், அப்போது தான் இவர்கள் எல்லாம் பயப்படுவார்கள் என விண்டா நந்தா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்