டிஸ்னி, யுடிவி - புதிய கூட்டணி

செவ்வாய், 31 மே 2011 (20:56 IST)
யுடிவி மோஷன் பிக்சர்ஸ் வால்ட் டிஸ்னி இந்தியாவுடன் கூட்டணி அமைத்துப் படங்கள் தயா‌ரிக்கவுள்ளது. இந்த ஒப்பந்தம் தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் நிறுவனமான வால்ட் டிஸ்னி இந்திய நிறுவனமான யுடிவியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது இந்திய சினிமாவின் தொழில்நுட்பத் தரத்தை மேலும் உயர்த்தும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப தொழில்நுட்ப அளவில் மட்டுமே இந்த கூட்டணி ஒப்பந்தம் இருக்கும். மற்றபடி படத்தின் தயா‌ரிப்பு, விளம்பரம், வியாபாரம் அனைத்தும் யுடிவியைச் சார்ந்தது. டிஸ்னி தொழில்நுட்ப ஒத்துழைப்பு மட்டுமே தரும்.

இந்த புதிய ஒப்பந்தம் தொழில்நுட்பத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

வெப்துனியாவைப் படிக்கவும்