காந்தி ஜெயந்தி அன்று வெளியாகும் அக்ஷயின் குஸ்தி படம்

புதன், 27 ஆகஸ்ட் 2014 (18:26 IST)
ஹாலிவுட்டில் வெளியாகி பரவாலான கவனிப்பை பெற்ற படம், வாரியர். அண்ணன், தம்பிகளின் பாக்சிங் போட்டியை அடிப்படையாகக் கொண்டது. நட்புக்கும் முக்கியத்துவம் உள்ள படம்.
இதனை ஹாலிவுட் ஸ்டுடியோவான லயன்ஸ் கேட்டுடன் இணைந்து கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. அக்ஷய் குமார், சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்கி ஷெராஃப், ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் நடித்துள்ள இப்படத்துக்கு பிரதர்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.
 
2015 அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கு படத்தை வெளியிடயிருப்பதாக கரண் ஜோஹர் அறிவித்துள்ளார். இந்த காந்தி ஜெயந்திக்கு ஹிர்த்திக் ரோஷனின் பாங் பாங், ஷாகித் கபூர் நடிப்பில் விஷால் பரத்வாஜ் இயக்கியுள்ள ஹெய்டர் ஆகிய படங்களும் வெளியாகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்