ஏபிசிடி சீக்வெல், பிரபுதேவா நீக்கம்

சனி, 31 மே 2014 (19:04 IST)
ஏபிசிடி - எனிபடி கேன் டான்ஸ் படத்தை இயக்கிய ரெமோ டிசோஸா அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை வரும் ஜூலையில் ஆரம்பிக்கிறார்.
 
நடனத்தை மையமாக வைத்து தயாரான ஏபிசிடி-யில் பிரபுதேவா ஹீரோவாக நடித்திருந்தார். படம் இந்தியில் மட்டும் நாற்பது கோடிகளுக்கு மேல் வசூலித்தது. தமிழிலும் இப்படம் டப் செய்து வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தின் சீக்வெலை டிசோஸா இயக்குகிறார். இந்தமுறை பிரபுதேவாவுக்குப் பதில் வருண் தவானை ஹீரோவாக்கியிருக்கிறார். நடனத்தில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இயங்கும் இந்திய இளைஞன் எப்படி அமெரிக்கா வரை தனது நடனத் திறமையால் செல்கிறான் என்பதுதான் கதை.
 
இந்த கதைக்கு வருண் தவான்தான் சரியான தேர்வாக இருக்கும். அவர் சிறந்த நடிகர், நடனத் திறமைமிக்கவர் என்று டிசோஸா கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்