மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டுமா? இதுதான் அந்த 4 அறிகுறிகள்

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (22:52 IST)
மனித  வாழ்க்கையில் பிறப்பு என்ற ஒன்று நிகழ்ந்துவிட்டால் இறப்பு என்பது நிச்சயம். ஆனால் பிறக்கும் நேரத்தை கூட மனிதனால் விஞ்ஞானத்தின் உதவியுடன் கணித்துவிடலாம். இறப்பை யாராலும் கணிக்க முடியாது. அடுத்த நிமிடமே மரணம் நேரலாம் அல்லது நூறு வருடங்கள் கழித்தும் நேரலாம்.



 


இந்நிலையில் உயிர்களை பிரித்து எடுத்து செல்லும் எமதர்மனை நண்பனாக்கி கொண்டால் இறப்பின் நேரத்தை அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்த அமிர்தா என்பவர் எமதர்மனை நோக்கி தவமிருந்தார். இந்த தவத்தின் பயனாக அமிர்தாவின் முன் தோன்றிய எமன், அமிர்தாவின் விருப்பப்படியே இறப்பை முன்கூட்டியே அறியும் வகையில் நான்கு அறிகுறிகளை தெரிவிப்பதாக வாக்கு கொடுத்தார்.

எமனின் நான்கு அறிகுறிகள் எப்போது வரும் என்று காத்திருந்த அமிர்தாவுக்கு ஒரு அறிகுறியும் தெரியவில்லை. தலைமுடி நரைத்து, பற்கள் விழுந்து, கண் பார்வை மங்கி, கைகால்களும் செயல் இழந்தன. பின்னர் ஒருநாள் அமிர்தா இறந்து போனார்.

எமலோகத்தில் அமிர்தா, எமதர்மனிடம் கொடுத்த வாக்கை ஏன் காப்பாற்றவில்லை என்று கேள்வி எழுப்பினார். அப்போது எமன் கூறியபோது நான் தந்த முதல் அறிகுறி அமிர்தாவின் தலைமுடி நரைத்தது, இரண்டாவது அறிகுறி பற்கள் கொட்டியது, மூன்றாவது அறிகுறி கண் பார்வை இழந்தது, நான்காவது அறிகுறி கை, கால்கள் செயலிழந்தது என்று கூறினார். எனவே மரணம் வருவதற்காக அறிகுறி இந்த நான்கு மட்டுமே என எமதர்மன் விளக்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்