காவிரியின் குறுக்கே புதிய அணை: ரயில் மறியல் போராட்டத்தில் வைகோ கைது

சனி, 22 நவம்பர் 2014 (19:40 IST)
காவிரியின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் புதிதாக அணைகளைக் கட்டப் போவதாக கர்நாடக அரசு அறிவித்திருந்த நிலையில் அதனை எதிர்த்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டங்களும் மறியல் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
 
ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் வைகோ
 
25க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
 
தஞ்சாவூரில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தஞ்சாவூர் ரயில் நிலையில் நிலையத்திற்கு வந்த ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்த வைகோவும் பிறரும் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த மறியல் போராட்டங்களில் கலந்துகொண்டவர்களில் 3000 பேர் வரை கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
விவசாயிகளின் போராட்டத்திற்கு வணிகர் சங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால், டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
 
கும்பகோணம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் கடைகள் முழுமையாக மூடப்ட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்