இந்தத் தேர்தலில் போட்டியிடும் ஒட்டுமொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை: 6151. இதில் அதிகபட்சமாக கொழும்பில் 792 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக பொலநறுவையில் 88 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 202 பேர் இந்தத் தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 225. யாருடைய ஆதரவும் இன்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ஒரு அரசியல் கட்சி அல்லது கூட்டணிக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 113.