இதன்மூலம் ரஷ்யாவின் அதிபராக இருக்கும் விளாடிமிர் புதின் 2036ஆவது ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்துள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பதிவான வாக்குகளில் இதுவரை 87 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாகும், அவற்றில் 77 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் அரசியலமைப்பை திருத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால் புதிதாக திருத்தப்படும் அரசியலமைப்பு சட்டத்தின்படி, அதிபர் தேர்தலில் வெல்லும்பட்சத்தில், ஆறு ஆண்டுகள் கொண்ட இரண்டு பதவி காலங்களுக்கு அவரால் அதிபர் பதவியில் நீடிக்க முடியும்.