வடக்கு ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வீட்டின் முன் பெரிய குழியைத் தோண்டி அதில் நெல்லை சேமிக்கின்றனர்.
தங்களின் முன்னோர் காலத்தில் இருந்து இந்த முறையை பின்பற்றி வருவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆந்திராவின் இச்சாபுரம், தெக்கலி, பலாசா, பதப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இந்த வழக்கம் அதிகமாக உள்ளது.
நெல் அறுவடை செய்யப்பட்டதும் அவர்கள் குழிகளை தோண்டுகின்றனர். தண்ணீர் குழிக்குள் வராமல் இருக்க வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். செம்மண், மாட்டு சாணம் ஆகியவற்றை கொண்டு மூடப்பட்ட அந்த குழியில் அவர்கள் நெல்லை சேமித்து வைக்கின்றனர். ஈரப்பதம், பூச்சி தொல்லையில் இருந்து நெல்லை பாதுகாப்பதற்கு இது சிறந்த வழியாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.