அமெரிக்காவில் புதிய சட்டம்: பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை

வியாழன், 20 பிப்ரவரி 2020 (22:02 IST)
அமெரிக்காவில் புதிய சட்டம்: பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை
அமெரிக்க மாகாணமான யூட்டாவின் மாநில செனட் சபை, ஒரே ஆண் பல பெண்களுடனோ, ஒரே பெண் பல ஆண்களுடனோ, ஒரே சமயத்தில் திருமண உறவில் இருப்பதை பெரிய குற்றமில்லை என்று அறிவிக்கும் சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
 
தற்போதைய சட்டத்தின்படி, பலருடன் திருமண உறவு கொண்டுள்ளவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
 
புதிய சட்ட வரைவின்படி, இரண்டு நபர்களுடன் ஒரே சமயத்தில் திருமண உறவில் இருந்தால் அது போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறு குற்றமாகவே கருதப்படும்.
 
எனினும், இந்த உறவில் தொடர்புடைய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இது குற்றமாக கருதப்படாது.
 
மூன்றாம் திருமணம் செய்ய முயன்ற கணவரை அடித்து உதைத்த முதல் மனைவி
 
தமது கணவர் அல்லது மனைவிக்கு தெரியாமல், வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்வது தொடர்ந்து பெரும் குற்றமாக நீடிக்கும்.
 
அந்த மாகாணத்தின் பிரதிநிதிகள் சபை இந்த சட்டத்துக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த சபையின் ஒப்புதலுக்கு பின்னரே இச்சட்டம் அமலுக்கு வரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்