நேபாள பூகம்பத்தில் பலியானவர் எண்ணிக்கை 3300ஐ தாண்டியது

திங்கள், 27 ஏப்ரல் 2015 (20:37 IST)
நேபாள பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3300 ஐயும் தாண்டிவிட்டதாக கூறும் அதிகாரிகள், ஆனாலும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
 

 
பூகம்பத்துக்கு பின்னரான பல அதிர்வுகள் தாக்கியதன் காரணமாக, தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மக்கள் தமது வீடுகளுக்கு செல்லாமல், தெருவோர கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர்.
 

 
பூகம்பத்தின் மையப்பகுதியை நோக்கி மீட்பு பணியாளர்கள் செல்லத் தொடங்கியுள்ளனர். சில வீதிகள் தற்போது தடைகள் அகற்றப்பட்டுள்ள திறக்கப்பட்டுள்ளன.
 

 
காலநிலை சீரடைந்துள்ளதால், இமயமலையின் அடிவார முகாமில் அகப்பட்டுள்ள காயமடைந்தவர்களை மீட்பதற்காக ஹெலிக்கொப்டர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளன.
 
குடிதண்ணீர் விநியோகம் மிகவும் அவரசரமாக தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடாரங்களும், பிணங்களுக்கான பைகளும் கூடத் தேவைப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்