இதனையடுத்து, இன்று சனிக்கிழமை காலை அந்தப் பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் இடத்தைப் பரிசீலனை செய்ததுடன், மண்டையோடுகள், மனித எலும்புகளையும் பார்வையிட்டு விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
யுத்தமோதல்கள் இடம்பெற்றதையடுத்து இந்தப் பகுதியில் இராணுவத்தினர் முகாமிட்டிருந்த காரணத்தினால்,பொதுமக்கள் அங்கு செல்வதில்லை என்றும், இராணுவத்தினர் அங்கிருந்து விலகிச் சென்றபின்னர், அந்தப் பகுதியில் களவாக மணல் ஏற்றப்பட்டு வந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மண்டையோடுகள், மனித எலும்புகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகள், கைப்பைகள், செருப்புகள் போன்றவற்றை வைத்துப்பார்க்கும்போது இங்கு இறந்தவர்கள் பெண்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.