கூடுதலாக மூன்று குழந்தைகள் இருப்பதை மறைத்தாரா மாரடோனா?

சனி, 9 மார்ச் 2019 (11:11 IST)
அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான டியேகோ மாரடோனா மூன்று கியூபா குழந்தைகளின் தந்தை என்பதை ஒப்புக்கொள்ள இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் வென்ற 58 வயதான மாரடோனா, தனது மனைவியை தவிர வேறு குழந்தைகள் தனக்கு கிடையாது என்று முன்னர் மறுத்திருந்தார். இந்த மூன்று குழந்தைகளோடு மொத்தம் எட்டு குழந்தைகளுக்கு அவர் தந்தையாகவுள்ளார்.
 
இந்த குழந்தைகளுக்கு தானே தந்தை என்பதை உறுதி செய்கின்ற சோதனைகளுக்காக ஹவானா செல்லவிருக்கும் மாரடோனா, இந்த ஆண்டின் முடிவில் இந்த குழந்தைகளுக்கு தானே தந்தை என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள இருப்பதாக அவரது வழக்கறிஞர் மேத்திஸ் மோர்லா தெரிவித்துள்ளார்.
 
இதன் மூலம், இரண்டு தாய்மார்களிடம் இருந்து பிறந்துள்ள இந்த மூன்று குழந்தைகளும் தந்தையாக மாரடோனாவின் பெயரை பயன்படுத்த வழி ஏற்படும்.
தன்னுடைய கோக்கையின் போதைமருந்து பழக்கத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள 2000ம் முதல் 2005ம் ஆண்டு வரை மாரடோனா கியூபாவுக்கு பலமுறை சென்றுள்ளார்.
 
அவ்வேளையில், அப்போதைய கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடன் நட்பாக பழகி, காஸ்டிரோவின் முகத்தை தனது காலில் பச்சைக்குத்தி கொண்டார்..
 
திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பின்னர், 2003ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்ட கிளெடியா வில்லாஃபேனுடன் பிறந்த 29 வயதான ஜியானினா மற்றும் 32 வயதான டல்மா என்ற இரு மகள்களை தவிர தனக்கு வேறு குழந்தைகள் இல்லை என்று மாரடோனா முன்னதாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
நீதிமன்ற போராட்டங்களுக்கு பின்னர், 32 வயதான டியேகோ ஜூனியர் மற்றும் 22 வயதான ஜானாவை தனது குழந்தைகள் என்பதை மாரடோனா ஏற்றுக்கொண்டுள்ளார்.
 
வேரோனிக்கா ஒஜிடாவோடு என்ற பெண்ணின் மூலம், 6 வயதான டியேகோ பெர்னாண்டோ என்ற இன்னொரு குழந்தையும் அவருக்கு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்