குவைத் புதிய சட்டம் : பறிபோகும் வேலைவாய்ப்புகள், பரிதவிக்கும் இந்தியர்கள் – பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம்
செவ்வாய், 21 ஜூலை 2020 (21:40 IST)
பிரதிக்தேசாய், லார்சன்அன்ட்டூப்ரோநிறுவனத்தின்தலைமைநிர்வாகபொறியாளர். கடந்த 25 ஆண்டுகளாககுவைத்தில்வசித்துவருகிறார். ஆனால், அவரதுஎதிர்காலம்நம்பிக்கைதருவதாகஇல்லை.
என்னகாரணம்?
வெளிநாட்டுப் பணியாளர்களைக் குறைக்க வழிவகை செய்யும் மசோதா குவைத்தின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது சட்டமாக வடிவம் பெற அரசின் அனுமதி தேவை.
அரசு மட்டும் அனுமதித்துவிட்டால், பிரதிக் தேசாயுடன் சேர்த்து குவைத்தில் வசிக்கும் 8 லட்சம் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். குவைத்தின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள். இதனை 30 சதவீதமாக குறைக்கத் திட்டமிடுகிறது குவைத்.
இப்போது குவைத்தில் வசிக்கும் 70 சதவீத வெளிநாட்டவர்களில் கணிசமானவர்கள் இந்தியர்கள்.
இந்த மசோதா சட்ட வடிவம் பெற்று நிறைவேறும்பட்சத்தில் இந்தியர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்.
குவைத்தின் பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது. உள்ளூர் மக்களே வேலை வாய்ப்பில்லாமல் பரிதவிக்கிறார்கள். இதன் காரணமாகவே இப்படியான சட்டம் நிறைவேற்றப்படுவதாகக் கூறுகின்றனர் வல்லுநர்கள்.
அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பணியாளர்களால் ஒரு சமநிலையற்ற நிலை குவைத்தில் நிலவுகிறது. எதிர்காலத்தில் இது பெரிய சவாலாக இருக்கப் போகிறது என்று குவைத் பிரதமர் ஷேக் சபா கூறியதாக குவைத் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியர்கள் மட்டுமல்ல, குவைத்தில் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள், பிலிப்பைன்ஸ் மக்கள், வங்கதேச மக்கள், எகிப்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் இதன் காரணமாகப் பேரிழப்பைச் சந்திக்கப் போகிறார்கள்.
இந்தியாகூறுவதுஎன்ன?
இது தொடர்பாக குவைத் அரசுடன் முன்பே பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறது இந்திய அரசு.
பிற அரபு தேசங்களைவிட குவைத்தில் இந்தியச் சமூகம் நன்கு அங்கீகரிக்கப்பட்டார்கள், மதிக்கப்பட்டார்கள். நாம் நமது எதிர்பார்ப்பைச் சொல்லிவிட்டோம். நமது கருத்தையும் எடுத்துக் கொண்டே இந்த சட்டம் தொடர்பாக குவைத் ஒரு முடிவுக்கு வரும் என்கிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தா.
இது வேலை பறிபோவது மட்டுமல்ல. மீண்டும் நாங்கள் இந்தியாவுக்கே வர நேரும் என்கிறார் பிரதிக் தேசாய்.
அவர், "ஓர் இடத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்தால், அந்த பகுதியுடன் நமக்கு உணர்வுப்பூர்வமாக பந்தம் ஏற்பட்டுவிடும். பொருளாதார இழப்பைவிட இதுதான் எனக்குப் பேரிழப்பாக தெரிகிறது," என்கிறார்.
இந்தியாவின் அந்நிய செலவாணியில் குவைத் பெரும்பங்கு வகிக்கிறது. பியூ ஆய்வு மையம் அளிக்கும் தகவலின்படி, 2017ஆம் ஆண்டு மட்டும் குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்கு 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை அனுப்பி உள்ளனர்.
ஏறத்தாழ் 3 லட்சம் இந்தியர்கள் ஓட்டுநர்களாக, சமையற் கலைஞர்களாக, வீட்டை பராமரிப்பவர்களாக குவைத்தில் வசிக்கிறார்கள்.
ஒருவேளை இவர்களை பணிநீக்கம் செய்யும்பட்சத்தில் உள்ளூர் மக்களைக் கொண்டு இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்கின்றனர் சிலர்.
குவைத்தின் பொருளாதாரம் அதிகமாக எண்ணெய் வளத்தைச் சார்ந்து இருக்கிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய்யின் வீழ்ச்சிதான் இவ்வாறாகப் பிரதிபலிக்கிறது.
இனிஎன்னநடக்கும்?
இந்த மசோதாவானது மற்றொரு குழுவுக்கு அனுப்பப்படும். அவர்கள் இது தொடர்பாக விரிவாகத் திட்டமிடுவார்கள்.
அரசின் கருத்துக்காக குவைத்தின் சட்டப்பேரவையும் காத்திருப்பதாகக் கூறுகிறது குவைத் டைம்ஸ் நாளிதழ்.
சாத்தியமில்லை
ஏறத்தாழ 8 லட்சம் பேரை இந்தியாவுக்கு அனுப்புவது சாத்தியமில்லை என்று பிபிசியிடம் கூறுகிறார் கைசர் ஷாகீர்.
இவர் அங்கு ஒரு கட்டட நிறுவனத்தில் தணிக்கையாளராக பணியாற்றுகிறார்.
அவர், "இந்த மசோதா அமல்படுத்தப்படும் என எனக்குத் தோன்றவில்லை. குவைத் அரசாங்கம் இந்தியர்கள் விஷயத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். அவர்களை அனுப்பாது," என்கிறார்.
வேலையில்லா திண்டாட்டம் குவைத்தில் அதிகரித்து வருவது, அரசுக்கு கடும் அழுத்தத்தைத் தந்துள்ளது என்கின்றனர் வல்லுநர்கள்.
வெளிநாட்டில் பயின்ற குவைத் மக்கள், மீண்டும் குவைத் வந்து அங்கு பணியாற்ற விரும்புகிறார்கள்.
அவர்களுக்கு இங்கு வேலை கிடைக்கவில்லை என்றால், வேறு எங்குக் கிடைக்கும்? இதன் காரணமாகத் திறமையான இந்தியர்கள் கூட பணி இழக்க நேரிடலாம் என்கிறார் குவைத்தில் வசிக்கும் இந்தியத் தணிக்கையாளர் ப்ரைன் தாமஸ்.
முழு பட்டியலை காட்டு
தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. ஆனால் நாட்டின் தற்போதைய மொத்த எண்ணிக்கையில் தெரியாமல் இருக்கலாம்
புதிய தொற்றுகளுக்கான முந்தைய தரவுகள் 3 நாட்களின் சராசரி. எண்ணிக்கை தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதால், தற்போதைய தேதிக்கான சராசரியை கணக்கிட இயலவில்லை.
ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்