கருத்தடைச் சாதனம் வேலை செய்யாததால் பெண்ணுக்கு $ 50,000 இழப்பீடு

வியாழன், 28 மே 2015 (11:08 IST)
கர்பத்தடை சாதனம் பொருத்தியும் பெண் ஒருவர் கர்பமானதால் அவருக்கு சுமார் 50,000 டாலர்களை ஒரு தனியார் மருத்துவமனை வழங்க வேண்டும் என கென்யாவின் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.


 
ஆப்ரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருக்கும் அந்த மருத்துவமனை கவனக் குறைவாக இருந்தது என்று தீர்ப்பை வழங்கிய நீதிபதி தெரிவித்துள்ளார்.
 
இழப்பீட்டுத் தொகையில் அந்தத் தாய்க்கு 5000 டாலர்களும், மீது 43,000 டாலர்கள் பிறக்கும் குழந்தையை வளர்க்கவும் அளிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
தான் கர்பமடைந்துள்ளதான செய்தி தனது திருமண வாழ்க்கையில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், கர்பத்தடை சாதனத்தை தான் பொருத்திக் கொண்டதாக பொய் கூறியதாகத் தனது கணவர் எண்ணினார் எனவும் அந்தப் பெண்மனி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
 
வழக்கு மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து இதுவரை சம்பந்தப்பட்ட மருத்துவமனை இதுவரை கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்