கணவர்களைக் கொலை செய்ததாக 67 வயதுப் பெண் மீது சந்தேகம்

வெள்ளி, 21 நவம்பர் 2014 (13:32 IST)
ஜப்பானில் தம் கணவன்மாரையும் சேர்ந்து வாழ்ந்து வந்தவர்களையும் தொடர்ச்சியாக கொலை செய்து வந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் 67 வயது பெண் ஒருவரின் வீட்டைக் காவல் துறையினர் சோதனையிட்டுள்ளனர்.
 
தம் புதிய கணவனுக்கு நஞ்சு வைப்பதற்காக சயனைட்டைப் பயன்படுத்தியுள்ளதாகச் சந்தேகம் வெளியானதை அடுத்தே, சிஸாகோ காகேஹி (Chisako Kakehi) என்ற இந்தப் பெண்ணை புதன்கிழமை (2014 நவம்பர் 19) காவல் துறையினர் கைது செய்தனர்.
 
2012ஆம் ஆண்டில் காகேஹியுடன் கொஞ்சம் காலம் வாழ்ந்த பின்னர் உயிரிழந்த இஸாவோவின் உடலில் சயனைட் கலந்திருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்தப் பெண்ணைத் திருமணம் புரிந்தவர்கள், சேர்ந்து வாழ்ந்தவர்கள் என மேலும் நான்கு ஆண்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
 
இவ்வாறு உயிரிழந்தவர்களிடமிருந்து சுமார் எட்டு லட்சம் டாலர்கள் பெறுமதியான சொத்துகளை இந்தப் பெண், சொத்துரிமை அடிப்படையில் பெற்றுள்ளார்.
 
தம் கணவன்மாரையும் சேர்ந்து வாழ்ந்தவர்களையும் கொலை செய்த குற்றச்சாட்டை, சிஸாகோ காகேஹி மறுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்