துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செய்த 50 பேர் கைது: தூத்துகுடியில் பரபரப்பு

ஞாயிறு, 22 மே 2022 (12:28 IST)
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆனதை அடுத்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்ற 50 பேர்கள் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் பலர் உயிரிழந்தனர், இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து நான்கு வருடங்கள் ஆனதை அடுத்து தூத்துக்குடியில் ஊர்வலமாக சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது 
 
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதியின்றி ஊர்வலமாக சென்றவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்