சிதைந்த நிலையில் ஓர் பாலுறவுக்காரரின் சடலம்

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (02:58 IST)
இஸ்தான்புலில் இருந்து மாயமான சிரியா நாட்டை சேர்ந்த ஒரு பாலுறவுக்கார அகதியின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என துருக்கியில் உள்ள ஓர் உரிமை கோரும் அமைப்பு தெரிவித்துள்ளது.
 

 
சிரியாவைச் சேர்ந்த ஒரு பாலுறவுக்கார அகதியின் உடல், அவர் இஸ்தான்புலில் இருந்து மாயமான இரண்டு நாட்களுக்கு பிறகு, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிபட்டுள்ளது என்று துருக்கியில் உள்ள ஒரு மனித உரிமை குழு தெரிவித்துள்ளது.
 
துருக்கியில் ஒரு பாலுறவுக்காரர்களுக்கான உரிமை அமைப்பு ஒன்று, முகம்மது விசம் சங்கரியின் உடல் அவரோடு வீட்டில் தங்கியிருந்தவர்களால் அடையாளம் காட்டப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
 
அவரது உடல் மிக மோசமான முறையில் சிதைக்கப்பட்டிருந்தது என்றும் அவரது உடையை வைத்து தான் அடையாளம் காணமுடிந்தது என்றும் அவர் ஒரு பாலுறவுக்காரராக இருந்ததற்காக ஆயுதம் தாங்கிய குழுவினர் அவரை அச்சுறுத்தினர் என்றும் கூறியுள்ளது.
 
அவர் ஓராண்டுக்கு முன்பு தனது தாயகத்தில் போர் ஏற்ப்பட்டிருந்த காரணத்தால் இஸ்தான்புலிற்கு வந்தார். துருக்கியில் ஓரின சேர்க்கை சட்டத்திற்கு புறம்பானது அல்ல. ஆனால் ஆயவாளர்கள் ஓரினசேர்க்கை பரந்து காணப்படுகிறது என்று தெரிவித்தனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்