10 வயது சிறுவனுக்கு பத்தாயிரம் டாலர் பரிசளித்த இன்ஸ்டாகிராம்

புதன், 4 மே 2016 (16:40 IST)
புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வதற்கான சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பத்துவயது சிறுவனுக்குப் பத்தாயிரம் டாலர் பரிசளிக்கப்பட்டிருக்கிறது.


 
இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துவதற்குத் தேவையான வயதை எட்டாத இந்த சிறுவன், இன்ஸ்டாகிராமில் மற்றவர்கள் பதியும் கருத்துக்களை தன்னால் அழிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார்.
 
இந்த சிறுவன் தம்மைத் தொடர்புகொண்டு இது குறித்து தெரிவித்ததும் இந்தக் குறைபாடு உடனடியாக சரிசெய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
 
இன்ஸ்டாகிராம் நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனக் குழுமத்தைச் சேர்ந்தது.
 
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமது சமூக வலைத்தளங்களில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டியவர்களுக்கு இதுவரை நாற்பது லட்சம் டாலர் கொடுத்திருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறது.
 
தான் வளர்ந்ததும் (இணைய) பாதுகாப்பு ஆய்வாளராக விரும்புவதாக ஜனி என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் அந்த சிறுவன் பின்லாந்து செய்தித்தாளிடம் தெரிவித்திருக்கிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்