”வெள்ளை மாளிகையில் அனைவரும் பொய் சொல்கின்றனர்” - டிரம்பின் முன்னாள் உதவியாளர்

செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (10:27 IST)

அமெரிக்க அதிபர் டிரம்பின் தொலைபேசி உரையாடல் என்று தான் நம்பும் உரையாடல் டேப் ஒன்றை டொனால்ட் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க தொலைக்காட்சியான என்பிசியில் ஒளிபரப்பப்பட்ட அந்த டேப்பில் டிரம்பின் குரல் என்று நம்பப்படும் குரல், ஒமராசா மனிகால்ட் நியூமேன் என்னும் அந்த ஊழியர் முந்தைய நாள் பணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது.
 
"இதுகுறித்து யாரும் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை" என அந்த ஆண் குரல் கூறுகிறது.
 
அதிருப்தியில் உள்ள ஒரு முன்னாள் ஊழியர் என்று அவரை வெள்ளை மாளிகை விவரித்துள்ளது.
 
அவர் பணியை இழந்தபின் தன்னை தாக்கி பேசுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
தலைமை அதிகாரி ஜான் கெல்லி இது விவகாரத்தை தீர்க்க நடவடிக்கைகள் எடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
வெள்ளை மாளிக்கையில் நடந்த தனிப்பட்ட உரையாடலை பதிவு செய்ததன் மூலம் அவர் சட்டத்தை மீறிவிட்டார் என அதிபர் டிரம்பின் வழக்கறிஞர் ரூடி கிலானி தெரிவித்துள்ளார்.
 
தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் பணிபுரிந்த காலத்திலிருந்து மனிகால்ட் நியூமேனுக்கு டிரம்பை தெரியும். வெள்ளை மாளிகையில் தொலைத்தொடர்பு துறையில் பணியில் சேருவதற்கு முன் 2016அதிபர் தேர்தலில் ஆப்ரிக்க அமெரிக்க பிரச்சனை தொடர்பாக டிரம்புக்கு ஆதரவாக பேசியுள்ளார் அவர்.
 
டேப்பில் இருந்த உரையாடல் என்ன?
 
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த டேப்பில் டிரம்பின் குரல் என்று கூறப்படும் அந்த குரல் நியூமேன் பணியிலிருந்து விலகுவதாக தொலைக்காட்சி செய்தியில் பார்த்ததாகவும், என்ன நடைபெறுகிறது என்றும் கேட்கிறது.
 
"ஜெனரல் கெல்லி என்னிடம் வந்து நீங்கள் அனைவரும் நான் பணியிலிருந்து விலக வேண்டும் என்பதை விரும்புவதாக தெரிவித்தார்" என்று அந்த குரலுக்கு நியூமேன் பதில் தெரிவிக்கிறார்.
 
"இதை யாரும் என்னிடம் சொல்லவில்லை நீ செல்வதை நான் விரும்பவில்லை" என்று அந்த ஆண் குரல் கூறுகிறது.
 
மனிகால்ட் நியூமேன் ஏன் பணியிலிருந்து விலகப்பட்டார்?
 
உடன் பணிபுரிபவர்களை அவர் தொல்லை செய்கிறார் என்று அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்த நிலையில்,அவர் டிசம்பர் 13 அன்று பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
 
பணிநீக்கப்பட்ட மனிகால்ட் நியூமேன் வெளியிட்ட அந்த டேப்பில் கெல்லி என்று நம்பப்படும் அந்த குரல், "குறிப்பிடத்தக்க நேர்மை பிரச்சனைகள்" தொடர்பாக நியூமேன் பணிநீக்கம் செய்யப்படுவதாகவும், அரசு வாகனங்களை அவர் பயன்படுத்துவது குறித்தும் பேசுகிறார்.
 
"முக்கிய சட்ட பிரச்சனை ஒன்று மீறப்பட்டுள்ளது. உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என நான் நம்புகிறேன் என்கிறது கெல்லி என்ற அந்த குரல்.
 
"அதற்கு இதுகுறித்து டிரம்பிற்கு தெரியுமா" என நியூமேன் கேட்கிறார் அதற்கு பதலளிக்க மறுக்கும் அந்த ஆண் குரல், கேள்வியை திசை திருப்பி "இதுகுறித்து மேலும் பேச வேண்டாம். பேச்சுவார்த்தைக்கு இடமில்லை" என்கிறார்.
 
"வெள்ளை மாளிகையில் அனைவரும் பொய் சொல்கின்றனர் எனவே என்னை பாதுகாக்க நான் இந்த டேப்பை வெளியிடுகிறேன்" என நியூமேன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்