தேர்தல் வரலாற்றில் அதிக பெண் எம்பிக்கள் தேர்வு!!

வெள்ளி, 24 மே 2019 (09:42 IST)
மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மொத்தம் 76 பெண் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
முதல் மக்களவை தேர்தல் நடந்ததில் இருந்து, பெண்களின் வெற்றி எண்ணிக்கை இதுவே அதிகமாகும். மொத்தமுள்ள 542 தொகுதிகளில் சுமார் 124 சதவீதம் அளவிற்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 66 பெண் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
அதிகபட்சமாக உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் இருந்து தலா 11 பெண் எம்பிக்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 
இத்தேர்தலில் 47 பெண்களை பாஜக களமிறக்கியது. இதில் 34 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கனிமொழி ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளார்கள். 
 
காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி வெற்றிபெற்றுள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட நான்கு பெண்களும் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்