ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் டெல்டா திரிபு - மீண்டும் பொதுமுடக்கம்

சனி, 31 ஜூலை 2021 (17:23 IST)
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு வேகமாக பரவி வருவதால் அங்கு பல இடங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குவின்ஸ்லாந்து, பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களில் இந்த பொதுமுடக்கம் சனிக்கிழமை முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் 15 சதவீதத்துக்கும் குறைவான நபர்களே இரு டோஸ் தடுப்பு மருந்துகளையும் பெற்றுள்ளனர்.
 
குவின்ஸ்லாந்தில் இதுவரை இல்லாத அளவு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியே வர வேண்டும்.
 
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கோவிட் கட்டுப்பாடுகளை அமல்படுத்த ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
 
சிட்னியில் வரும் ஆகஸ்டு 28ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்