ஆப்கானிஸ்தானில் பணயக்கைதி கழுத்தை வெட்டிக்கொலை

செவ்வாய், 7 ஏப்ரல் 2015 (21:19 IST)
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணிந்த நபர்கள் கழுத்தை வெட்டிக்கொல்வதைக் காட்டும் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
 

 
இந்த தீவிரவாதிகள் இஸ்லாமிய அரசு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஊகங்கள் உலவினாலும், இந்த காணொளியில் இருந்தவர்கள் தங்களை உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
1990களில் நிறுவப்பட்ட இந்த குழு தாலிபனுடன் இணைந்து செயற்பட்டு வந்தது. ஆப்கானின் சிறைகளில் இருக்கும் தங்களின் சகாக்களை விடுவிக்காவிட்டால் தங்களிடம் இருக்கும் பணயக்கைதிகளின் தலைகளை துண்டித்துக் கொல்வோம் என்று இந்த தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்