2 லட்சம் பேர் பலி: அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ்  பல்கலைக்கழக தரவுகள் காட்டுகின்றன.

இந்திய நேரப்படி புதன் காலை வரை அங்கு 2,00,724 பேர் கோவிட்-19 காரணமாக மரணித்திருந்தார்கள்.
 
உலக நாடுகளிலேயே அதிகபட்சமாக இதுவரை 68 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக  பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
 
இறப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் மற்றும் இரண்டு லட்சத்திற்கு இடையில் இருந்தால் இந்த நாடு மிகவும் நல்ல வேலை செய்திருக்கிறது என்று பொருள் என்று மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
 
பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டு 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
 
இன்னும் இரண்டு நாட்களில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் பூஜ்ஜியத்தை நெருங்கும் என்று டிரம்ப் அப்போது தெரிவித்திருந்தார்.
 
கொரோனா வைரஸ் பரவலை மிகவும் மோசமாக கையாள்வதாக டிரம்பின் நிர்வாகம் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்