குருப்பெயர்ச்சி குறித்த சந்தேகமா...?? மாலை 4.15 மணி அளவில் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் நேரலை!!
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (11:05 IST)
குருப்பெயர்ச்சி குறித்து விளக்க மாலை 4.15 மணி அளவில் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் நேரலை.
குரு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கபடி இந்த ஆண்டு 15-11-2020 அன்று (ஞயிற்று கிழமை) இரவு 11.48 மணிக்கு மகர ராசிக்கு மாறுகிறார்.
மகர ராசியில் இருக்கும் குருபகாவன் 4-4-2021 அன்று அதிசாரம் பெற்று கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அவர் 14-9-2021 அன்று அதிசாரம் முடிந்து மகர ராசிக்கு மாறுகிறார். அங்கு அவர் 13-11-2021 வரை இருப்பார். அதன்பிறகு கும்ப ராசிக்கு மாறுகிறார்.
இந்த குருப்பெயர்ச்சி ராசிகாரர்களுக்கு எந்த மாதியான பலன்களை தரும் எனவும் குருப்பெயர்ச்சி குறித்த சந்தேகங்களை தீர்கக்கவும் இன்றும் மாலை 4.15 மணி அளவில் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் நேரலையில் தோன்றுகிறார்.
மக்கள் குருப்பெயர்ச்சி குறித்த தங்களது சந்தேகங்களையும், பலன்களையும் தெரிந்துக்கொள்ள நேரலையில் கலந்துக்கொள்ளவும்.