இந்த நிலையில் பல ஆண்டுகளாக லதா ரஜினியுடன் நட்பில் இருக்கும் நளினி சிதம்பரம், 'பி.ஜே.பி சாயத்தோடு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ரஜினி ஈடுபட வேண்டாம். அப்படிச் செய்தால், அது தோல்வியில்தான் முடியும்’ என்று எடுத்துச் சொல்லி மனம் மாற்றும் வேலையில் ஈடுபட்டாராம் இந்தத் தகவலை அறிந்த பி.ஜே.பி தரப்பு கடும் டென்ஷன் ஆனாதாம். இதுவும் ரெய்டுக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. லதா ரஜினிக்கு நளினி சிதம்பரம் தான் சட்ட ஆலோசகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.