தசரா விழாவில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடியை குறைகூறுவதா என்று கேள்வி எழுப்பிய தமிழிசை சவுந்தரராஜன், கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் போன்ற விழாக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் கருணாநிதி ஏன் தீபாவாளிக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மரியாதைக்குரிய மூத்த தலைவர் கருணாநிதி, நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தசரா விழாவில் கலந்து கொண்டதையும், ஜெய்ஸ்ரீராம் என்று சொன்னதையும் விமர்சித்து மதசார்பற்ற நாட்டில் எப்படி மதம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தாங்கள் முதல் அமைச்சராக இருந்தபோது கிறிஸ்துமஸ், பக்ரீத், ரம்ஜான் போன்ற விழாக்களுக்கு வாழ்த்துகள் சொல்லும் நீங்கள் ஏன் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லுவதில்லை. அப்படி என்றால் மதசார்பற்ற தலைவரா நீங்கள்? என்பது எங்களின் கேள்வி மட்டுமல்ல மக்களின் கேள்வியாகவும் இருந்து கொண்டிருப்பதை தாங்கள் மறுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.