ஓ.பி.எஸ் உளவாளி இவரா? - அதிர்ச்சியில் தினகரன்

திங்கள், 17 ஏப்ரல் 2017 (17:18 IST)
முன்னாள் மறைந்த முதல்வரும், அ.தி.மு.க முன்னாள் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதா இறப்பிற்கு பின்பு அ.தி.மு.க கட்சி மூன்று பட்டுள்ளது என்பது பழைய கதை, ஆனால் தற்போது இரண்டு பட்டுள்ளது தான் என்று சொல்ல வேண்டும்.


 

 
ஏனென்றால் தீபா அவருக்கு கிடைத்த உரிய வாய்ப்பை இழந்து விட்டதால் அரசியலில் தற்போது செல்லாக்காசு ஆகி விட்டார். தற்போது அவரது கணவர் கட்சி மற்றும் அவரது கட்சி என்று குடும்ப கட்சிகளை மட்டும் தான் பார்க்க முடிகின்றது. ஆனால் சசிகலா அணி, பன்னீர் அணி என்றுதான் அழைக்கப்படுகிறது. 
 
தற்போது, டி.டி.வி தினகரனோ தாய் கழகத்திற்கு மீண்டும் வாருங்கள் என்று சூழ்ச்சமாக ஆங்காங்கே கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொது சட்டமன்ற தேர்தலின் போது இந்திய அளவில் தேர்தல் ஆணையத்தையும், அனைத்து கட்சிகளையும் திரும்ப பார்க்க வைத்தது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல். ஏனென்றால் அதிக பணம் பட்டுவாடா, மது மற்றும் பரிசுப்பொருட்களுடன் கூடிய செய்தி என்று தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அடைந்தது.
 
ரூ.5 கோடிக்கு மேல் பணம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்புநாதன் வீடு மற்றும் குடோன்களில் இருந்து தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதே வருமான வரித்துறையினர் அந்த அன்புநாதன் வீடு மற்றும் குடோன்களில் இருந்து எடுக்கப்பட்டது நத்தம் விஸ்வநாதனின் பணம் என்று வெளிப்படையாகவே தெரிவித்தது.


 

 
ஆனால் தற்போது நத்தம் விஸ்வநாதன் ஒ.பன்னீர் செல்வத்தின் அணிக்கு சென்றுவிட்டதால் மோடி ஆட்சி அப்படியே விட்டு விட்டது ! மேலும் அப்போது பிடிப்பட்ட பணம் நத்தம் விஸ்வநாதனின் பணம், ஆனால் வருமான வரித்துறையினரால் பிடிபட்ட அன்புநாதன், தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தொழில் பங்குதாரர் என்பது யாருக்கும் தெரியாத உண்மை. 
 
மேலும், அன்புநாதன் இன்றும் அ.தி.மு.க-வின் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூலமாக கட்சியின் ரகசியங்கள் கசிவதோடு, தற்போது ஒ.பி.எஸ் அணிக்கு சென்றவர்கள் எல்லோரும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூலமாக தான் சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும் கட்சி பதவி ஒரு புறம், அமைச்சர் பதவி ஒரு புறம் என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது.


 
இது ஒருபுறம் இருக்க, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒ.பி.எஸ் உளவாளி என உளவுத்துறை தினகரனிடம் கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகிறது. இதனால், தற்போது தினகரன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் ஒட்டு மொத்த கோபத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தள்ளப்பட்டுள்ளராம், விரைவில் கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பதவி பறிக்கப்படும் என்ற அறிவிப்பு ரகசியமாக கசிந்துள்ளது.
 
சி. ஆனந்தகுமார் 

வெப்துனியாவைப் படிக்கவும்