பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி

புதன், 21 ஜூன் 2017 (21:22 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.


 

 
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை மாதம் 17ம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக சார்பில் பீகார் முன்னாள் ஆளுநர் வேட்பாளர் ராம்நாத் கோவிந் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழகம் ஆகிய முதல்வர்களிடம் தொலைப்பேசியில் மூலம் ஆதரவு கோரினார். 
 
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துக்கொண்டனர். கூட்டம் முடிவடைந்த பின் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 
 
முதல்வரின் இந்த முடிவுக்கு தினகரன் மற்றும் அவரது கட்டுப்பாட்டு எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்வார்கள் என தெரியவில்லை. அவர்களும் ஆதரவு அளிப்பார்களா அல்லது எதிர்ப்பு தெரிவிப்பார்களா? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்