சட்டமன்றத்தில் எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்க தினகரன் ஆதரவாளர்கள் அதிரடி முடிவு
செவ்வாய், 6 ஜூன் 2017 (06:30 IST)
டெல்லி திகார் சிறையில் இருந்து ஜாமீன் பெற்ற தினக்ரன் ரிலீஸ் ஆன அடுத்த நிமிடமே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நாற்காலி ஆட்டம் காண தொடங்கிவிட்டது. மீண்டும் அரசியல் பணி செய்வேன் என்று கூறியுள்ளதால் எடப்பாடியார் கலக்கத்தில் உள்ளார்.
இந்த நிலையில் தினகரனின் முதல் டார்கெட் தன்னை அரசியலில் இருந்து துரத்திவிட வேண்டும் என்று முடிவெடுத்த நான்கு முக்கிய அமைச்சர்கள். இவர்கள் நான்கு பேர்களையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்காவிட்டால் வரும் 14ஆம் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தின்போது தனது ஆதரவாளர்களான 37 பேர்களும் எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை சட்டமன்றத்தில் செய்வார்கள் என்று பயமுறுத்தப்படுகிறதாம்
ஆனால் தினகரன் குறிப்பிடும் அந்த நான்கு அமைச்சர்களை முதல்வர் நீக்கும் ஐடியாவில் இல்லை என்பதால் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மு.க.ஸ்டாலின் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும் என்ற நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.