சசிகலா மீது பல வருத்தங்கள் இருந்தாலும் தன்னை ஆச்சாரமாக கவனித்து கொள்ள அவரை தவிர வேறு நபர் இல்லை என்று தான் ஜெயலலிதா நம்பினாராம். அதனால் சசிகலாவின் குடும்பத்தினர் அனைவரையும் வெறுத்து ஒதுக்கியபோதிலும், சசிகலாவை மட்டும் கூடவே வைத்து கொண்டாராம்.
ஜெயலலிதாவை ஒரு குழந்தை போல சசிகலா பார்த்து கொண்டதால் அவரை சசிகலா 'குட்டிப்பையா' என்று அழைப்பது உண்டாம். அதனால்தான் ஜெயலலிதா மறைந்த தினத்தன்று 'எழுந்திரு குட்டிப்பையா எழுந்திரு' என்று சசிகலா, ஜெ. உடல் மீது கதறி அழுததாக கூறப்படுகிறது.