நள்ளிரவு வரை தொடர்ந்த விசாரணை. தினகரன் வழக்கறிஞர் திடீரென வந்ததால் பரபரப்பு

செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (04:50 IST)
ஒருங்கிணைந்த அதிமுக சின்னமான இரட்டை இலையை பெறுவதற்காக ரூ.60 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கிற்காக கடந்த மூன்று நாட்களாக டெல்லி போலீசார் டிடிவி தினகரனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.  நேற்று நள்ளிரவு வரை இந்த விசாரணை நடந்தது.



 


இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென தினகரன் வழக்கறிஞர் குமார் விசாரணை நடந்து கொண்டிருக்கும் டெல்லி குற்றப்புலனாய்வு பிரிவு காவல்நிலையத்திற்கு வந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினகரனை கைது செய்ய டெல்லி போலீசார் ஒருவேளை திட்டமிட்டிருந்தால் அதற்காக முன் ஜாமீன் பெறுவது குறித்த ஆலோசிக்க வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என டிடிவி தினகரனுக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக இன்றுடன் விசாரணை முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்