திமுக 'பி' அணியின் வேட்பாளர்தான் மதுசூதனன். டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

திங்கள், 27 மார்ச் 2017 (06:43 IST)
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது மக்கள் நலக்கூட்டணி அதிமுக பி அணி என்று விமர்சிக்கப்பட்டது. இதை உறுதி செய்வது போல் மக்கள் நலக்கூட்டணி ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை என்றாலும் பெருவாரியான வாக்குகளை பிரித்து அதிமுக வெற்றி பெற ஒரு காரணமாக அமைந்தது.



 


இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவின் பி அணிதான் ஓபிஎஸ் அணி என்று அதிமுக அம்மா கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன் தற்போது ஆர்.கே.நகரில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் தனது பிரச்சாரத்தின்போது திமுக மற்றும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியினரை கடுமையாக சாடி வருகிறார்.

இந்த நிலையில் நேற்றைய பிரச்சாரத்தில் பேசிய அவர், “திமுகவில் பி அணிதான் ஓபிஎஸ் அணி. ஓ.பன்னீர்செல்வமும் மு.க.ஸ்டாலினும் இணைந்து மதுசூதனனை ஆர்.கே.நகரில் வேட்பாளாராக களமிறக்குகிறார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டு சதியை எல்லாம் தோற்கடித்து வெற்றி பெறுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்