தலைமைக்கழகத்தில் சசிகலா படமா? தூக்கியெறிங்கள்: மதுசூதனன்

செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (07:15 IST)
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஒன்றுபட்டு இருந்த அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்தது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே அ.தி.மு.க.வுக்கு மீண்டும் இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என்றால் இரண்டு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



 


இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஓ.பி.எஸ். அணியினரும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் பேச்சு நடத்த இருப்பதாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இரு அணிகளும் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை வெளியேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஓ.பி.எஸ். அணியின் சார்பில்
கே.பி.முனுசாமி தெரிவித்ததை அடுத்து பேச்சுவார்த்தைக்கு திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனால் இரு அணியினர்களும் நேற்று  தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.

மேலும் அதிமுக தலைமை கழகத்தில் இருந்து சசிகலா படத்தை உடனே அகற்ற வேண்டும் என்றும் அதன் பின்னரே பேச்சுவார்த்தை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்