தினகரனுக்காக சிறை செல்லவும் தயார். போலீசிடம் சவால் விட்ட நாஞ்சி சம்பத்

திங்கள், 15 மே 2017 (04:56 IST)
சசிகலா பெங்களூர் சிறையிலும், தினகரன் திஹார் சிறையிலும் இருக்கும் நிலையில் சசிகலா குடும்பத்தையே கிட்டத்தட்ட அதிமுக தலைவர்கள் மறந்துவிட்டார்கள். வெளியே இருக்கும் சசிகலா குடும்பத்தினர்கள், தாங்களும் சிறை செல்லும் வகையில் மாட்டிக்கொள்ள கூடாது என அடைக்கி வாசிக்கின்றனர்.

இந்நிலையில் சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் நேற்று நெல்லையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினர். தினகர்னின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் புகழேந்தி, சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு தொண்டர்கள் கூட்டம் பெரிதாக இல்லை என்றாலும் மத்திய, மாநில உளவுத் துறையினர் கவனமாக ஆய்வு செய்தனர். தொடர்ந்து கூட்டம் முழுவதையும் தங்கள் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருந்தனர்.



 


இந்த கூட்டத்தில் ஆவேசமாக பேசிய நாஞ்சில் சம்பத், ஓபிஎஸ் அணியினர்களை கடுமையாக சாடினார். குறிப்பாக ஓபிஎஸ், பி.எச்.பாண்டியன் ஆகியோர்களை அவரது பாணியில் தாக்கி பேசியதற்கு கூட்டத்தினர் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் உணர்ச்சிவசப்பட்டு இரவு 10 மணிக்கும் மேல் பேசிக்கொண்டே இருந்ததை போலீசார் சுட்டிக்காட்டியபோது, முடிந்தால் கைது செய்யுங்கள், தினகரனுக்காக சிறை செல்லவும் தயார் என்று போலீசாரிடம் சவால் விட்டார். இருப்பினும் போலீசார் அமைதி காத்ததால் சிறிது நேரத்தில் பேச்சை முடித்து கொண்டார் நாஞ்சில்

வெப்துனியாவைப் படிக்கவும்