அழகிரியை நினைத்து ஏங்கவில்லை : கருணாநிதி ஓபன் டாக்

வெள்ளி, 21 அக்டோபர் 2016 (12:47 IST)
மு.க.ஸ்டாலினே தன் அரசியால் வாரிசு, அழகிரியை நினைத்து நான் ஏங்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி பேட்டியளித்துள்ளார்.


 

 
திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்தார். அப்போது பல விஷயங்களை அவர் மனம் திறந்து பேசினார். 
 
திமுகவின் அடுத்த தலைமை பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது  “ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, திமுகவின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர். அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார்.
 
அழகிரியை பொறுத்த வரை, இருப்பதை எண்ணி மகிழ்ந்து, மேலும் மேலும் முன்னேற்றப் பாதையில் நடைபோட வேண்டுமே தவிர, கழகத்தில் தற்போது இல்லாத யாரையும் நினைத்து, ஏங்கி நிற்பது பயணத்துக்குத் தடையாகிவிடும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்