தமிழக ஆம் ஆத்மி தலைவருடன் கமல் சந்திப்பு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

செவ்வாய், 18 ஜூலை 2017 (00:43 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் தமிழக அரசின் மீது தொடர்ச்சியாக விமர்சனம் வைத்து கொண்டிருப்பதும், தமிழக அமைச்சர்கள் கமல் மீது கட்டம் கட்டிக்கொண்டிருப்பதும் தொடர்ந்து வரும் நிலையில் ரஜினிக்கு முன்னரே கமல் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் தமிழக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன் இன்று கமல்ஹாசனை சந்தித்து பேசினார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பாக இருந்தாலும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.
 
அரசியலுக்கு வருவதாக இருந்தால் கமல் தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என்று துண்டு போட்டு வைப்பதற்காக ஆம் ஆத்மி சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்