முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தற்போது தேமுதிகவில் இருக்கிறார். தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம் சமீபத்தில் கூட்டப்பட்டது. அதில், தர்மபுரி கலெக்டர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் முல்லைவேந்தனும் கலந்து கொண்டார்.
அப்போது கலெக்டரிடம் பேசிய அவர், தர்மபுரி மாவட்ட விவசாயிகளை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், அரசு மானியத்தில் கொடுக்க வேண்டிய உரங்கள் வெளிச்சந்தையில் விற்கப்படுவதாகவும், சரியான மின்சாரம் இல்லாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்படுவதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.
அதோடு, பாதுகாப்புக்காக தான் வைத்திருக்கும் துப்பாக்கியின் உரிமத்தை புதுப்பிக்க 8 மாதங்களாக போராடி வருவதாகவும், ஆனால் அதிகாரிகள் காலதாமதம் செய்வதாகவும் குறை கூறியவர், சட்டென்று தனது துப்பாக்கியை காட்டி ‘இதை கூட அரசு கவனிக்கவில்லை’ என்று கூறினார்.