சசிகலா தன்னை அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் அமர்த்தி விட்டு சிறைக்கு சென்றவுடன், அதிமுகவின் தலைமை போல் செயல்பட்டார் தினகரன். மேலும், திவாகரன் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்களை கட்சி மற்றும் ஆட்சி விவகாரங்களில் தலையிடமால் பார்த்துக்கொண்டார். இது திவாகரன் உள்ளிட்டவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் பொதுக்கூட்டங்களை நாஞ்சில் சம்பத் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் நடத்தி வருகின்றனர். இந்த வகையில் தினகரனின் சொந்த ஊரான மன்னார்குடியிலும் பொதுக்கூட்டம் நடத்த அவர்களின் தரப்பில் போலீசாரிடம் அனுமதி பெறப்பட்டது.
ஆனால், அந்த பகுதி காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்ட திவாகரன், இந்த பொதுக்கூட்டம் நடைபெறக்கூடாது என உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.